வெள்ளி, 30 டிசம்பர், 2011

மறக்கப்பட்ட மாண்புமிகு ??!!!


சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்வரை நமதூரில் வசித்தவர்

உணவு வழங்கும் மக்களுக்கு உதவுவதை தனது கடமையாக எண்ணியவர்;

அந்த காலத்தில் வாழ்ந்த பெரியோர்கள் வெள்ளையும் சொள்ளையுமாக நடமாட உதவியவர் ;

அடுத்தவர் சுமையை தன சுமையாக எண்ணியவர்;

சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த பாரதிராஜா படத்தில் ஹீரோவுக்குப் போட்டியாக இவர் பாடிய பாடல் தமிழ்நாடு முழுவதும் ஹிட்டானது ;

இவரை ஆதரித்தவர்கள் கை விட்டதாலும் அப்போதைய இளைஞர்களின் துன்புறுத்தலாலும் , குடும்பம், உறவினர்களுடன் ஊரைவிட்டே சென்றுவிட்டவர்;

இந்த நல்லவரை இன்றும் நமது பக்கத்து ஊரில் (ஜவ்வாதுபட்டி)காணலாம்;
சமீபத்தில் இவரை நான் பார்த்தபோது எடுத்த படம் உங்களுக்காக கீழே

\
\
\
\
\
\
\
\
\
\

புதன், 21 டிசம்பர், 2011

அந்த மறக்கப்பட்ட மாண்புமிகு


அந்த மறக்கப்பட்ட மாண்புமிகு இவர்தான் இன்றைய இளைய தலைமுறை கண்டறியாத கழுதையின் மகத்துவத்தை எடுத்துரைக்கவே இந்த பதிவு.