இடையகோட்டை ஊர்வரலாறு

         

  " பெற்ற  தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்ததுவே" 

என்றார் புரட்சிக்கவி பாரதிதாசன் 

   நம் கனிவான செயல்களால் பெற்ற தாய் மகிழ வேண்டும். நமது பெருமைமிகு செயல்களால் நமது பிறந்த மண் வரலாற்றில் இடம்பெற வேண்டும் . 500 ஆண்டுகளுக்கும்  மேலான வரலாற்றை உள்ளடக்கிய இடையகோட்டையின் மண்பேசும் சரித்திரத்தை உங்களுக்காக  வழங்குகிறார் இடையகோட்டை வரலாற்றை தொகுக்கும் மகத்தான சேவையை பல ஆடுகளாகச்செய்து வரும் முன்னாள் நெடுஞ்சாலைத்துறை ஊழியர் திருமிகு.முஹம்மது இஸ்மாயில் அவர்கள் . இனி அவர் எழுதும் வரலாற்று  வரிகள் இதோ. 


                  """ " மாக்கைய நாயக்கரே நீங்கள் போர் தொழில் மட்டும் தெரிந்தவரல்லர் ;பயிர்த்தொழிலிலும் சிறந்தவர்; கால்நடைகள் வளர்ப்பதிலும் ஆர்வமுள்ளவர் ஆகையால் இந்த மதுரைப் பட்டணத்துக்கு வடக்கே 5 காத தூரத்திலும் பழனி மலைக்கு நேர்கிழக்கே 3 காத தூரத்திலும், கருமலைக்கு மேற்கில் வளம்மிக்க நங்காஞ்சி நதி தீரத்தில் கால்நடைகளை மேய்த்து வாழும் இடையர் குடியிருப்பு உள்ளது. அங்கு சென்று நீங்கள் எனது  பிரதிநிதியாக ஆட்சி புரியுங்கள் ""''"
      என்று விசுவநாத நாயக்கர், அருகில் நின்றிருந்த தளவாய் அரியநாத முதலியாரை அழைத்து "தளவாய் அவர்களே மாக்கைய நாயக்கருக்கு நமது அரசின் சின்னமான சமுதாடு வாளையும், வெண்புரவியையும்(வெள்ளைக்குதிரை), தேவையான பொக்கிஷத்தையும் கொடுத்து அனுப்புங்கள் என உத்தரவிட்டார். 

      பாண்டியனின் மதுரையில் சிம்மாசனமிட்டமர்ந்த முதல் நாயக்க மன்னர் விசுவநாத நாயக்கர். 1529-இல் பதவியேற்ற இவர் பாண்டிய மண்டலத்தை ஒரே குடையின் கீழ் கொண்டுவர முயற்சித்து ஐந்து ஆண்டுகள் போராடியும் முடியாததால்  தளவாய் அரியநாதரின் ஆலோசனைப்படி பாண்டிய மண்டலத்தை 72 பாளையங்களாக நிர்வாக வசதிப்படி பிரித்தார். அவற்றில் 22 பாளையங்கள் மறவர் பாளையங்களாக நெல்லைச் சீமையிலும், 50 நாயக்கர் பாளையங்கள் மதுரை,திண்டுக்கல் பகுதியிலும் அமைந்தன. அவற்றில் திண்டுக்கல் பகுதியிலமைந்த 20 பாளையங்களில் ஒன்றுதான் நமது இடையகோட்டையாகும்.

   மதுரையின் முதல் நாயக்க மன்னர் விசுவநாத நாயக்கரும் 1529 முதல் 1564 வரை 36 ஆண்டு காலம் ஆட்சிபுரிந்தார். இடையகோட்டையின் முதல் பாளையாதிபதி (ஜமீன்தார்) மாக்கைய நாயக்கரும் 1534 முதல் 36 ஆண்டுகாலம் ஆட்சிபுரிந்தார்.


மதுரையின் வரலாறும்இடையகோட்டையின் வரலாறும் ஒரே இலக்கை நோக்கிச்செல்லும் இணைந்த இரு தண்டவாளங்களைப்போல்  உள்ளமை நம்மை வியப்புறச் செய்கிறது.விசுவநாத நாயக்கர், காசி விசுவநாதரின் அருளால் பிறந்ததாக இவரின் பெற்றோர் நம்பியதால் இப்பெயரைச் சூட்டினர்.இவர் திருச்சி தெப்பக்குளம் அமையக் காரணமானவர்.

     தளவாய் அரியநாதர் காஞ்சிபுரம் அருகே மேப்பேடு கிராமத்தில் ஏழை முதலியார் குடும்பத்தில் பிறந்த தமிழன். தனது அறிவாலும் ஆற்றலாலும் கிருஷ்ணதேவராயரின் அன்பைப்பெற்று அமைச்சரானவர்.  அரசியல் ராஜதந்திரராகவும், நிகரற்ற தளபதியாகவும் விளங்கியதால் இவர் "தளவாய்" எனபோற்றப்பட்டார்.விசுவனாதருடன் மதுரைக்கு வந்துவிட்ட இவர், இடுப்பில் குத்துவாளுடன் முன்கால்களைத்தூக்கிப் பாய்ந்து செல்லும் குதிரையில் இவர் அமர்ந்திருக்கும் காட்சி இன்றளவும் மதுரை புதுமண்டபம்முன் சிலை வடிவில் காணலாம்.


   இடையகோட்டையின் முதல் ஜமீந்தார் மாக்கையநாயக்கரும் வெரியப்பூர் அருகில் மல்லையாபுரம் மலைக்கோயிலில் சிலையாகக் காட்சிதருகிறார். நீர்வளம் கண்டு நிலவளம் பெருக்கிய இவரின் செயல்கள் இடையகோட்டை எங்கும் விரவிக்கிடக்கின்றன.   

                                                                                                                   
   முதலாம் பாளையாதிபதி   "  வீரமல்லமாக்கைய நாயக்கர் (1534-1570)"
    ரும்பும் இளநீரும்  கண்திறந்து மடைபாயும் 
      கட்டு கலங்காணும் கதிர் உழக்கு நெல்காணும் 
      அறுதாள் அறுத்துவர  மறுதாளும் பயிராகும் 
      அரிதாளின் அடியினிலே ஐங்கலந்தேன் கூடுகட்டும் 
      மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று    யானைகட்டிப் போரடிக்கும்  அழகான தென்மதுரை .  
                                                          -புகழேந்தி புலவர்  



       அழகான  தென்மது ரையை விட்டுப் புறப்பட்ட மாக்கைய நாயக்கரும் அவரது கூட்டத்தாரும் காடு, மலை கடந்து கடும் பயணம் மேற்கொண்டு கடைசியாய் "இடையர் குடியிருப்பு " வந்து சேர்ந்தனர் .  கால்நடைகளை  மேய்த்து வாழ்கின்ற ஒரு எழில் மிகு ஊர். கிழக்கே இமயமென எழுந்து நின்று தென்வடலாய் படுத்திருக்கும் யானை போல் காட்சிதரும் கருமலையும்; மேற்க்கே பொங்கிப்பெருக்கெடுத்து தென் வடலாய் ப்பாயும்  நங்காஞ்சி ஆறுமென  (சுமார் 479 வருடங்களுக்குமுன் ),இயற்கையாகவே அமைந்திட்ட மலை வளமும்,வன வளமும், நதி வளமும்  மாக்கைய நாயக்கரின் மனதில் பரவசத்தை உண்டுபண்ணியது .எங்கெங்கும் பசுமை கொஞ்சும் இவ்விடத்தில் இனி சிகப்பு வண்ணம் தேவையில்லை என்ற எண்ணத்தில்,    அவர்தம் போர்கருவிகலெல்லாம் கொல்லன் பட்டறையில் உழவுக்கருவிகளாக்கப்பட்டன .

       உடன் வந்தோரையெல்லாம்  12 குழுக்களாக்கி 12 இடங்களுக்கு அனுப்பி வேளாண் தொழில் செய்யப்பணித்தார் .அந்த 12 இடங்களும் இன்று 12 ஊர்களாக நமது அரண்மனையோடு தொடர்பி உள்ளன. நதியின் கிழக்கு பகுதியில் வாழ்ந்து வந்தவருக்கு எதிர்கரையில் (மேற்கு)  நடக்கும் ஒரு நிகழ்ச்சி அவரின் சிந்தனையைக் கிளறியது . அது ஒரு நீர்த்துறை . முரண்பட்ட குணங்கள் கொண்ட வனவிலங்குகள் வருவதும்  நீர் அருந்தி முடித்தபின் சலனமின்றிப்  பிரிந்து செல்வதையும் கண்டவருக்கு, இம்மண்ணுக்கும் தண்ணீருக்கும் ஏதோ ஒரு மகத்துவம் இருப்பதாக அவர்தம் உள்மனம் உணர்த்தியது .அந்த இடத்தில் ஒரு கோட்டை கட்டப்பட்டது . அன்றுமுதல் அந்த இடையர் குடியிருப்பு "இடையகோட்டை" எனஅழைக்கப்பட்டது இந்நிகழ்ச்சி 1906-ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட மதுரை மாவட்ட கெஜட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. போரைப் புறம்தள்ளி வேளாண் தொழிலுக்கு வித்திட்ட மாக்கைய  நாயக்கர் 36 ஆண்டுகள் ஆட்சி செய்து 1570-ஆம் ஆண்டு மறைந்தார்.                                                                                    -தொடர்ந்து பேசுவேன்...

7 கருத்துகள்:

  1. நான் உங்கள் ஊரில் படித்து வளர்ந்தவன். என் தந்தையார் இந்த ஊரில் தான் நான்கு வருடங்கள் காவல் துறை அதிகாரியாக பணியாற்றினார்கள்.
    நீண்ட நாளாக நான் வர நினைத்தும் பணி சுமை காரணமாக என் பயணம் தள்ளி போகிறது. என் அலை பேசி
    9789778887
    என்னை அவசியம் தொடர்பு கொள்ளுங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொதுவாக கூறி உள்ளீர்கள்... உங்கள் பெயரோ உங்கள் தந்தையார் பெயரையோ குறிப்பிடவில்லை... யார் என்று தெரியவில்லையே...

      நீக்கு
  2. இப்போது இடையகோட்டை ஜமீன் வம்சத்தைச் சேர்ந்தவர் யார் இருக்கிறார்கள்? என் பெரியப்பா சின்னத்தம்பி என்கிற சிவகாமாட்சியப்ப முதலியாருடன் படித்தார்கல் என்று என் தகப்பனார் சோழவந்தான் ’கன்ட்ரோல்’ கன்னியப்ப முதலியார் சொல்லக் கேள்வி.

    பதிலளிநீக்கு
  3. இடையகோட்டை ஜமீன் வம்சத்தைச் சேர்ந்தவர் என் பெரியப்பா சின்னத்தம்பி என்கிற சிவகாமாட்சியப்ப முதலியாருடன் படித்தார்கள் என்றும் நீண்ட நாள் தொடர்பிலிருந்தார்கள் என்றும் அறிவேன்.

    பதிலளிநீக்கு
  4. தங்கள் எண்

    பதிலளிநீக்கு