சனி, 13 ஏப்ரல், 2013

இடையகோட்டை ஊர் வரலாறு அத்தியாயம் 2

    முதல் அத்தியாயம் இடையகோட்டை ஊர் வரலாறு என்ற பக்கத்தில் உள்ளது                                                        திரு.M.முஹம்மது இஸ்மாயில் 
 

இரண்டாம் பாளையாதிபதி 

எர்ரகுடி திப்பைய நாயக்கர் கி .பி . (1570-1595)

                 கல்லும் காவேரியும் புல்லும் பூமியும்          சந்திராதித்தர் உள்ளவரைக்கும் தர்மகட்டளை ......

-                            இடையகோட்டை திருவேங்கடநாதப் பெருமாள் கோவில் கல்வெட்டு

                   இடையகோட்டையைப் பற்றி சொல்லும்முன் மதுரையைப் பற்றியும் சொல்லவேண்டும் மதுரையின் இரண்டாவது நாயக்க மன்னர் முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர்இவர் கி.பி.1564முதல்1571வரை 7 ஆண்டுகள் மட்டுமே மதுரையை ஆண்டார்.பாளையங்கோட்டைக்கு அருகே கிருஷ்ணாபுரம் என்ற பெயரில் ஒரு ஊரை உருவாக்கி அங்கு கலையழகும் சிலையழகும் கொஞ்சும் திருவேங்கடநாதப்பெருமாள்கோவில் என்ற ஆலயத்தை உருவாக்கியவர் .
இனி இடையகோட்டைக்கு வருவோம் இடையகோட்டையின் இரண்டாம் பாளையாதிபதி எர்ரகுடி திப்பைய நாயக்கர், இவர் மாக்கையநாயக்கரின் புதல்வர்.
        இவரின் ஆட்சிக்காலத்தில் தங்களின் தேவைக்கு மிஞ்சிய பாலை இடையர்கள் மண்பானைகளில் ஊற்றி தலையில் சுமந்து வந்து அரண்மனையில் வைத்து குழந்தைப் பால் என்ற பெயரில் தாய்மார்களுக்கு இலவசமாக வழங்கப்படும். அவ்வாறு பால் ஊற்றி வைக்கப் பயன்படுத்தப்பட்ட  மிகப்பெரிய அண்டாக்களை இன்றும் அரண்மனையில் காணமுடியும். 
     இவரின் ஆட்சியில் தான் திருவேங்கடநாதப் பெருமாள்  கோவில் கட்டப்பட்டு அதன் பராமரிப்பிற்காக மிகப்பெரிய விளைநிலம் மானியமாக விடப்பட்டது.
       பாண்டிய மண்டலத்தில் நாயக்க மன்னர் இருவர் முதன்முதலாகக் கட்டிய கோவில்களும் திருவேங்கடநாதப் பெருமாள் பெயரில் அமைந்தது விந்தையான நிகழ்வாகும்.

      

                                                                                               -தொடர்ந்து பேசுவேன்...