வியாழன், 29 மார்ச், 2018

IDAYAKOTTAI - வருந்துகிறோம்

இடையகோட்டையில் திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கிய ஆரம்ப கால இயக்க முன்னோடியும், எம்.ஜி.ஆரின் மீது கொண்டிருந்த பேரன்பால் அ.இ.அ.தி.மு.க உருவானபோது அவ்வியக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு வாழ்நாள் முழுவதும் அக்கட்சியின் விசுவாசியாகத் திகழ்ந்த  திரு.அப்துல் வகாப் அவர்கள்  இன்று காலை உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.அன்னாரது உடல் நல்லடக்கம் இன்று பிற்பகல் இடையகோட்டை ,ஜும்ஆ பள்ளியில் இன்று பிற்பகல் நடைபெற்றது என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

        அன்னார் முன்னர் தி.மு.க.வில் இருந்தபோது கிளைப் பொருளாளராக பணியாற்றியுள்ளார். பேரறிஞர்.அண்ணா, டாக்டர்.கலைஞர் ஆகியோர் நமது ஊருக்கு வந்தபோது பொதுக்கூட்டங்களை நடத்த உறுதுணையாக இருந்ததுடன், இவர் பேருந்து நிலையத்தில் நடத்திவந்த சைக்கிள் கடையே கட்சியின் அலுவலகமாகத் திகழ்ந்துள்ளது.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் தி.மு.க.வில் இருந்து விலகியபோது அவருடன் சென்ற பல்லாயிரம் தொண்டர்களில் அன்னாரும் ஒருவர் அவரின் ஆன்ம நலனுக்காக பிரார்த்திக்க வேண்டுகிறோம்.