ஞாயிறு, 22 டிசம்பர், 2019

இடையகோட்டையில் ஒரு இலவச மூலிகைப் பண்ணை 1

         மூலிகைப்பண்ணை என்றதும் தோட்ட அமைப்பில் நிறைய பணியாளர்கள் வேலை செய்யும் முள்கம்பி வேலியுடன் பெரிதாக கற்பனை காட்சிகள் விரியக்கூடும். 
                           கட்டாந்தரையாக இருந்த நிலம்  சுமார் அரை மணிநேரம் மழை பெய்த பின் ஒன்றிரண்டு நாட்களில்  புட்கள், செடிகள் முளைப்பதை பார்த்திருப்போம். அவற்றில் பார்த்தீனியா மற்றும் சீமை கருவேலம் தவிர மீதம் உள்ள அனைத்து தாவரங்களும் மூலிகைதான் என்பது எத்தனை  பேருக்குத் தெரியும்? என்ன ஒரு வேதனை என்றால் அந்தஅரிய  பொக்கிஷங்களை களைகள் என்று கூறி, மண்ணை மலடாக்கும் ரசாயன களைக்கொல்லி மருந்துகள் மூலம் அழித்துவிடுகிறோம். 
                              சிலவற்றின் வேர் அல்லது இலை அல்லது தண்டு, விதை, காய், பூ என ஏதேனும் ஒரு பகுதியோ அல்லது முழுவதுமோ மருத்துவ குணம் கொண்டவை. நேரடியாக உண்ணும் வகையில், சமைத்து உண்ணும்படியோ, கஷாயம், தைலம்,பூச்சு மருந்து என எதோ ஒரு வகையில் மருத்துவ தன்மை கொண்டவை. 
                              இத்தகைய அரிய மூலிகைகள் அதிகமாக உள்ள ஒரு இடம்தான் நமது ஊர் நங்காஞ்சி அணை பகுதியாகும். இங்கு தும்பை, கண்டங்கத்திரி, சிறு நெருஞ்சி, பெருநெருஞ்சி,சிறுகண் பீளை, துளசி, பண்ணைக்கீரை, ஆவாரை, நிலஆவாரை, பேய்கும்மட்டி, நாயுருவி மற்றும் எண்ணற்ற தாவரங்களுடன் பல்வேறு பறவைகளும் கண்களை கொள்ளை கொள்ளும் அழகுடன் காட்சியளிக்கிறது. இக்காட்சிகளை வெய்யில் காலத்துக்கு முன்பாக மட்டுமே காணலாம். இல்லாவிட்டால் என்ன?  இரண்டாம் பத்தியின் முதல் வரியை படிக்கவும்.
                 என் கண்ணுக்கு அகப்பட்ட பெயர் தெரிந்த & தெரியாத  சில மூலிகைகளின் படங்கள்.
                 

























இடையகோட்டையில் ஒரு இலவச மூலிகைப் பண்ணை 2





















வியாழன், 22 ஆகஸ்ட், 2019

திங்கள், 5 ஆகஸ்ட், 2019

அக்கம் பக்கம் திண்டுக்கல் மலைக்கோட்டை-1

  திண்டுக்கல் மலைக்கோட்டை சரித்திர புகழ்பெற்ற ஒரு முக்கிய சுற்றுலா தலம். ஆனால் அதிகம் கண்டுகொள்ளப்படாமல் வரலாற்றாசிரியர்களால் புறக்கணிக்கப்பட்ட இடமும் கூட. இங்கு மலை உச்சியில் ஒரு கோயில் உள்ளது. இக்கோயிலின்  கீழ் பகுதியில் பலத்த பாதுகாப்பு அரண்களுடன் கூடிய கோட்டை உள்ளது. இது பல்வேறு மன்னர்களின் ஆதிக்கத்தில் இருந்து பின்னர் மைசூர் வேங்கை ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோரின் ஆட்சியின் கீழ் வந்தது. 
          கோட்டையின் மீது எதிரிகள் படை எடுப்பு நிகழ்ந்தால் அவர்களை தடுத்து அழிக்கும் வகையில் சுற்றிலும் ஆங்காங்கே காவல் கூடங்களுடன் பீரங்கி போன்ற ஆயுதங்கள்  நிறுவப்பட்டுள்ளது அத்தகைய பீரங்கிகளில் ஒன்று  வெடிக்காமல் அப்படியே இன்றும் உள்ளதை காணலாம். இந்த காவல் அரண்கள் மற்றும் பீரங்கி மேடைகளில் இருந்து பார்த்தால் திண்டுக்கல் நகரின் முழு தோற்றத்தையும் காண இயலும் வகையில் நேர்த்தியாக கட்டப்பட்டுள்ளது பல நூறு கைதிகளை அடைத்து வைக்கும் வகையில் பிரம்மாண்டமான சிறையும், சிதைவடைந்த வெடி மருந்து கிடங்குகளும், சிறந்த புகை போக்கி அமைப்புடன் கூடிய சமையலறை ஆகிய கட்டிடங்கள் இன்றளவும் அப்படியே உள்ளன.
         இக்கோட்டை தற்சமயம் சுமார் 25 ஆண்டுகளாக தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது அதற்கு முன்னர் போதிய பாதுகாப்பு இன்மையால் பல சேதாரங்கள் ஏற்பட்டுள்ளது தற்போது  பல இடங்களில் மண் மூடிக் கிடந்த இடங்களில் இருந்த மண் தொல்லியல் துறையால் அகற்றப்பட்டு சற்று நல்ல முறையில் பராமரிக்க படுகிறது, என்றாலும் பார்வையிட செல்லும் பொதுமக்களின் பொறுப்பற்ற செயல்களால் ஆங்காங்கே முகம் சுளிக்க வைக்கும் அவலங்களும் இருக்கத்தான் செய்கிறது. ஒரு வரலாற்று தலத்தை பாதுகாக்கும் பொறுப்புணர்வு ஒவ்வொருவருக்கும் உள்ளது என்பதை எல்லோரும் உணரவேண்டும்.  நமது நாட்டு சுற்றுலா தலங்கள் வெளிநாட்டு பயணிகளால் மதிக்கப்படக்கூடிய அளவில் பாதியை கூட நம்மவர்கள் மதிப்பதில்லை. விளைவு பல அறிய பொக்கிஷங்கள் நம் கண் முன்னே சிதைவடைந்து கொண்டுதான் உள்ளது. இங்குள்ள கோயிலின் பிரகார தளத்தில் கூட மீன் போன்ற பல்வேறு உருவங்கள் அழகுற செதுக்கப்பட்டுள்ளன.. மேலும் கோயிலின் சுற்றுச் சுவர் பகுதிகளில் கல்வெட்டுகளும் உள்ளன. இவை அனைத்தும் வரலாற்று ஆர்வலர்களால் கண்டு கொள்ளப்படவில்லை என்பது மிகவும் வேதனையை தருகிறது. 
       இந்த கோட்டையில் இருந்துதான் இந்திய விடுதலை போராட்ட வித்து உருவானது. 1700களில் மத்திய பகுதியில் இங்கு உருவான கிளர்ச்சியே அந்நிய ஆதிக்கத்திற்கு எதிரான முதல் போராட்டம் ஆகும்.