ஞாயிறு, 12 மே, 2019

IDAYAKOTTAI- சுற்றுச்சூழல்

"மனிதர்கள் இல்லாத உலகில் பறவைகளால் வாழ இயலும், ஆனால் பறவைகள் இல்லாத உலகில் மனிதனால் வாழ இயலாது"
-பறவை மனிதர். டாக்டர் .சலீம் அலி.
இந்த படங்களில் காணப்படும் சுற்றுச்சூழல் குறித்த செய்தி என்னவென்று என்னவென்று யூகிக்க முடிகிறதா ஒவ்வொரு மின் கம்பங்கள் அருகிலும் ஒரு வேப்பமரம் முளைத்து வருவதை காணலாம் இது எவ்வாறு சாத்தியம் எவ்வாறு இப்படி விதைக்கப்படுகிறது
 அதாவது விதைகளை சரியாக மின்கம்பங்களில் அடியில் விதைத்தது யார்?
இப்புவியில் வாழும் எண்ணற்ற பறவையினங்களில் சமுதாய துப்புரவாளர்கள் என்ற அடைமொழிக்கு உரிய பறவை காகம் தான். இதற்குக் காரணம் அனைத்து உணவுகளையும் உண்ணக்கூடிய அனைத்துண்ணி வகையை சார்ந்த காகத்திற்கு சைவ உணவுகளில் மிகவும் பிடித்த உணவு வேப்பம்பழம். இந்த வேப்பம் பழங்கள் முழுமையாக காகங்களால் உட்கொள்ளப்பட்டு அதனுடைய உணவு மண்டலத்தில் செரித்தபின் வேப்ப விதை கழிவாக வெளிவருகின்றது. இவ்வாறு   காகத்தின் கழிவாக வெளிவரும் வேப்பம் விதை அதிக முளைப்பு திறன் கொண்டதாக  இருக்கிறது. பொதுவாக காகங்கள் உயரமான மரங்களிலும் மின் கம்பங்கள் போன்ற இடங்களில் அமர்ந்திருக்கும் பொழுது வெளியேற்றப்படும் எச்சம் தரையில் விழுந்து அவ்விடத்தில் ஈரப்பதம் கிடைக்கும் நேரத்தில் முளைவிட்டு செடியாகி மரமாகிறது. முன்பு எல்லாம் பெரும்பாலான இடங்கள் மண் தரையாக செடி கொடிகள் வளரக் கூடிய அளவில் இருந்தன ஆனால் நவீனம் என்ற பெயரில் அனைத்து இடங்களிலும் மனிதன் தன் சுயலாபத்திற்காக சூழலைக் கெடுத்து அதாவது தார் சாலைகள் மற்றும் சிமெண்ட் சாலைகள் அமைக்கப்பட்டு விட்டதால் இயற்கையான முறையில் மரங்கள் வளர இருந்த இத்தகைய வாய்ப்புகள் அடைக்கப்பட்டு விட்டன மனிதனும் செய்யாமல் இயற்கையாக இவ்வாறான பறவைகள் மூலம் நடைபெறும் செயலையும்  தடுத்ததன் விளைவு இன்று வெயிலின் கொடுமைக்கு ஆளாகிவிட்டோம். இது ஒரு உதாரணம் மட்டுமே.கிளிகள்,மைனாக்கள், சிட்டுக்குருவிகள் என ஒவ்வொரு பறவையும் ஒரு சூழல் காவலர்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். மனிதன் தன்னுடைய சுயநலத்துக்காக செய்த சீர்கேடுகளால் இன்று மற்ற உயிரினங்கள் மட்டுமின்றி மனிதனும்  பாதிப்புக்கு ஆளாகிவிட்டதுதான் சோகம்.
குறிப்பு: இப்படங்கள் அனைத்தும் இடையகோட்டையின் பல்வேறு பகுதிகளில் எடுக்கப்பட்டவை.