ஞாயிறு, 22 டிசம்பர், 2019

இடையகோட்டையில் ஒரு இலவச மூலிகைப் பண்ணை 1

         மூலிகைப்பண்ணை என்றதும் தோட்ட அமைப்பில் நிறைய பணியாளர்கள் வேலை செய்யும் முள்கம்பி வேலியுடன் பெரிதாக கற்பனை காட்சிகள் விரியக்கூடும். 
                           கட்டாந்தரையாக இருந்த நிலம்  சுமார் அரை மணிநேரம் மழை பெய்த பின் ஒன்றிரண்டு நாட்களில்  புட்கள், செடிகள் முளைப்பதை பார்த்திருப்போம். அவற்றில் பார்த்தீனியா மற்றும் சீமை கருவேலம் தவிர மீதம் உள்ள அனைத்து தாவரங்களும் மூலிகைதான் என்பது எத்தனை  பேருக்குத் தெரியும்? என்ன ஒரு வேதனை என்றால் அந்தஅரிய  பொக்கிஷங்களை களைகள் என்று கூறி, மண்ணை மலடாக்கும் ரசாயன களைக்கொல்லி மருந்துகள் மூலம் அழித்துவிடுகிறோம். 
                              சிலவற்றின் வேர் அல்லது இலை அல்லது தண்டு, விதை, காய், பூ என ஏதேனும் ஒரு பகுதியோ அல்லது முழுவதுமோ மருத்துவ குணம் கொண்டவை. நேரடியாக உண்ணும் வகையில், சமைத்து உண்ணும்படியோ, கஷாயம், தைலம்,பூச்சு மருந்து என எதோ ஒரு வகையில் மருத்துவ தன்மை கொண்டவை. 
                              இத்தகைய அரிய மூலிகைகள் அதிகமாக உள்ள ஒரு இடம்தான் நமது ஊர் நங்காஞ்சி அணை பகுதியாகும். இங்கு தும்பை, கண்டங்கத்திரி, சிறு நெருஞ்சி, பெருநெருஞ்சி,சிறுகண் பீளை, துளசி, பண்ணைக்கீரை, ஆவாரை, நிலஆவாரை, பேய்கும்மட்டி, நாயுருவி மற்றும் எண்ணற்ற தாவரங்களுடன் பல்வேறு பறவைகளும் கண்களை கொள்ளை கொள்ளும் அழகுடன் காட்சியளிக்கிறது. இக்காட்சிகளை வெய்யில் காலத்துக்கு முன்பாக மட்டுமே காணலாம். இல்லாவிட்டால் என்ன?  இரண்டாம் பத்தியின் முதல் வரியை படிக்கவும்.
                 என் கண்ணுக்கு அகப்பட்ட பெயர் தெரிந்த & தெரியாத  சில மூலிகைகளின் படங்கள்.
                 

























இடையகோட்டையில் ஒரு இலவச மூலிகைப் பண்ணை 2