சமய நல்லிணக்க திருவிழா சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் இடையகோட்டை முஹையதீன் ஆண்டவர் தர்ஹா உரூஸ் விழா நடந்து முடிந்துள்ளது.
விழா துளிகள்
* ஒவ்வொரு ஆண்டும் ஹிஜ்ரி காலண்டர் படி ரபியுல் ஆகிர் மாதம் கொண்டாடப்படுகிறது.
* முன்னதாக ரபியுல் அவ்வல் மாதத்தில் மிலாடி நபி முடிந்த பின்னர் வரக்கூடிய வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு சந்தனக்கூடு செப்பனிடும் பணிகளுக்காக தர்ஹா திறக்கப்படும்.
* ரபியுல் அவ்வல் மாதத்தின் கடைசி நாள் மாலை (ரபீயுல் ஆகிர் பிறை துவங்கும் நேரம்) கொடியேற்றம் நடைபெறும்.
* கொடியேற்ற ஊர்வலம் அன்றைய அஸர் தொழுகைக்கு பிறகு தொடங்கி இடையகோட்டை ஜமீன் அரண்மனையை அடையும்.
* ஜமீன்தார் சார்பாக வழங்கப்படும் கொடியை பெற்று குதிரை மீது வைத்துக்கொண்டு ஊர்வலம் மீண்டும் தர்ஹா வந்து சேர்ந்தபின்னர் மஹ்ரிப் தொழுகைக்குப்பின் மினாராவில் நிறுத்தப்பட்டுள்ள கொடிமரத்தில் ஏற்றப்படுகிறது.
* இதேநாளில்தான் தமிழகத்தில் புகழ்பெற்ற மதுரை தெற்குவாசல் முஹைதீன் ஆண்டவர் தர்ஹா கொடியேற்றம் நடைபெறும்.
* ரபீயுல் ஆகிர் பிறை 9 அன்று மஹரிபுக்குப் பிறகு பாக்தாதில் இருந்து பெறப்பட்ட பழமை வாய்த்த போர்வை ஊர்வலம் நடைபெறுகிறது.
* ரபீயுல் ஆகிர் பிறை 10,11,12 ஆகிய மூன்று நாட்கள் உரூஸ் விழா நடைபெறுகிறது. இந்த மூன்று நாட்களும் பகல் மற்றும் இரவு நேரங்களில் பிரார்த்தனை செய்ய விரும்பும் அனைவருக்கும் ஆண்,பெண்,சாதி,மத பேதமின்றி தர்ஹாவில் அனுமதி வழங்கப்படுகிறது.
* இரவு முழுவதும் நடைபெறும் நிகழ்ச்சிகளின் இறுதியில் அதிகாலையில் வண்ணமிகு வாணவேடிக்கைகளுக்கு பின்னர் சந்தனக் கூடு ஊர்வலம் நடைபெறுகிறது
* மூன்றாவது நாள் உரூஸ் ஊர்வலம் நிறைவுற்றவுடன் வருகை தந்துள்ள பக்தர்களுக்கு தப்ரூக் (பிரசாதம்) ஆக சந்தனம் வழங்கப்பட்டு அன்றைய தினம் மாலை மஹ்ரிப் தொழுகைக்குப் பின்னர் கொடி இறக்குதலுடன் உரூஸ் விழா நிறைவடைகிறது.
* விழா நாட்களில் காலை முதல் இரவு வரை பக்தர்கள் நேர்ச்சையாக வழங்கும் கந்தூரி (அன்னதானம்) நடைபெறுகிறது.