புதன், 16 பிப்ரவரி, 2022
சனி, 12 பிப்ரவரி, 2022
IDAYAKOTTAI - வால்நட்சத்திரம்
ஹேல்-பாப்
ஆலன் ஹேல் மற்றும் தாமஸ் பாப் ஆகியோர் ஜூலை 23, 1995 இல் ஹேல்-பாப் என்ற வால் நட்சத்திரத்தை வெவ்வேறு தொலைநோக்கிகள் மூலம் தனித்தனியாகக் கண்டுபிடித்தனர். இது வரை கண்டறியப்பட்ட வால்நட்சத்திரங்களிலேயே மிகப்பெரிய, பிரகாசமான வால்நட்சத்திரம் இதுவேயாகும். புவியிலிருந்து வெறும் கண்ணால் நீண்ட நாட்களுக்கு (சுமார் 18 மாதங்கள்) காணப்பட்ட வால்நட்சத்திரமும் இதுவேயாகும். ஹேல்-பாப் வால் நட்சத்திரம் 4200 ஆண்டுகளுக்கு ஒருமுறை புவியின் சுற்றுப்பாதைக்கு அருகே வரும்போது மட்டுமே வெறும் கண்ணால் காணமுடியும்.
தன்னுடைய மிக நீண்ட பயணத்தில் இது வியாழன் அருகே இருந்தபோது அதன் ஈர்ப்பு விசை காரணமாக இதன் சுற்றுப்பாதை வெகுவாகக் குறைந்துவிட்டது. ஒரு சுற்று என்பது பூர்த்தியாக 2533 ஆண்டுகள் ஆக குறைந்து விட்டது எனவே இனி இது கி.பி.4,385ல் தான் தோன்றும். வானியலாளர்களின் தொடர் கண்காணிப்பில் கடைசியாக 2017-ம் ஆண்டு சூரியக் குடும்பத்தில் புளுட்டோவுக்கு அருகில் தென்பட்டதாக செய்திகள் வந்தன.
24.03.1996 முதல் 30.03.1996 வரை நமது இடையகோட்டை வான்பகுதியில் தெளிவாகத் தென்பட்ட ஹேல் பாப் வால் நட்சத்திரத்தை பார்த்த நம்மூர் மக்களின் ஆச்சரியமு்ம், மகிழ்ச்சியும் அளவில்லாதது.
சூமேக்கர் - லெவி 9
கலிபோர்னியா வானியல் கூடத்தில் கரோலின் சூமேக்கர், யுஜின் மேர்லே சூமேக்கர், டேவிட் லெவி ஆகிய வானியலாளர்களால் 23.03.1993-ல் தற்செயலாகக் கண்டறியப்பட்ட வால்நட்சத்திரத்துக்கு அவர்களின் பெயரே சூட்டப்பட்டு சூமேக்கர் - லெவி 9 என்றழைக்கப்பட்டது. உலக மக்களை பெரும் பீதிக்கு ஆளாக்கிய இது சுமார் 20 துண்டுகளாக உடைந்து ஜுலை1994-ல் ஒவ்வொறு துண்டாக 16-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை வியாழன் கிரகத்தில் மோதி அழிந்தது. நவீன தொலைநோக்கிகளின் உதவியால் படமாக்கப்பட்ட இயற்கையான வானியல் பேரழிவு இதுவாகும்.
செய்தித்தாட்கள் கிளப்பிய புரளிகள் காரணமாக சூமேக்கர் - லெவி 9 வியாழனில் மோதுவதால் உலகம் அழியப்போவதாக நம்பி நமது பக்கத்து கிராமம் ஒன்றில் 16.07.1994 அன்று ஊர்க்கூட்டம் போட்டு விடிய விடிய கவலையுடன் கண்விழித்து காத்திருந்தது நாடு முழுவதும் பல ஊர்களில் பகை மறந்து பொது விருந்துகள் நடைபெற்ற கூத்தும் வேற லெவல்தான்.
கொசுறு
சூமேக்கர் - லெவி 9 போல பல வால்நட்சத்திரங்கள் அத்துமீறி சூரியக்குடும்பத்தில் நுழைந்து புவிக்கு அபாயகரமாக மாறும்போது அவற்றை தன்பால் ஈர்த்து அழிக்கும் காரியத்தை பல்லாயிரம் ஆண்டுகளாகச் செய்து வருகிறார் சூரியக்குடும்பத்தின் பொியண்ணன் மாண்புமிகு வியாழன் அவர்கள்.
இந்தப்பதிவு குறித்த உங்களதுகருத்துக்களை தயவுசெய்து கீழே உள்ள கருத்துப்பெட்டியில் பதிவு செய்யவும்.