நான் அவரை சார் என்று தான் அழைப்பேன் அவரும் என்னை மட்டும் அல்ல எல்லோரையும் சார் என்று தான் சொல்வார். இடையகோட்டை, பாளையத்தின் (பின்னாளில் ஜமீன்) பரம்பரை அரண்மனை ராஜ வைத்தியராக இருந்தவர் பின்னாளில் ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வந்தார் இருந்தபோதிலும் தள்ளாத வயது ஏற்படும் வரை வைத்தியத்திலும் அவ்வப்போது ஈடுபட்டு வந்ததுடன் நோயாளிகளின் நாடி பார்ப்பதில் கில்லாடி யாரேனும் உடல் நலிவடைந்து விட்டால் இவரை அழைத்து ஆலோசனை கேட்பது வழக்கம் வந்து நாடி பிடித்து பார்த்து நோயாளியின் இறுதிக்காலத்தை கணக்கிட்டு இவ்வாறு கூறுவார் 7 நாட்கள் 14 நாட்கள் என்று நாள் கணக்கில் அல்லது 3 மணிநேரம் 7மணி நேரம் என மணிக்கணக்கில் அவர் கூறும் கணிப்புகள் சரியாகவே இருக்கும். ஒருமுறை 1918ஆம் வெளியிடப்பட்ட யாக்கோபு செந்தூர சூஸ்திரம் என்ற வைத்திய நூல் என்னிடம் உள்ளது என அவரிடம் கூறினேன். மறுநாள் என்னிடம் இருந்து படித்து பார்க்கவாங்கிச் சென்று ஒரே நாளில் திருப்பி கொடுத்து விட்டார். படித்து விட்டீர்களா என நான் கேட்க மனப்பாடமே செய்து விட்டேன் என்று கூறி அதிர வைத்தார். அந்த புத்தகத்தை 20 வருடங்களாக படிக்க முயன்றும் முடியவில்லை (புரியவில்லை) அபார நினைவாற்றல். ஓய்வு நேரத்தில் தடித்தடியான பழைய வைத்திய நூல்களின் செய்யுள் நடையில் அமைந்த மருத்துவ குறிப்புகளை ராகத்துடன் கம்பீர குரலில் ரசனைக்குரிய வகையில் பாடுவார். பழங்கால கடைத்தெருவான மேற்கு வீதியில் அவர் நடத்திய காலை நேர டீக்கடை வடையின் ருசி இன்றைய பெருசுகளால் மறக்க முடியாது. நூற்றாண்டு கண்டு வாழ்ந்த இடையகோட்டை, ராஜவைத்தியர் ஷாகுல் ஹமீது அவர்கள் 19.11.2022 சனிக்கிழமை காலை காலமானார். அவருடைய வைத்திய முறையைதொடர யாரும் இல்லை என்பதுதான் வேதனை.
திங்கள், 21 நவம்பர், 2022
IDAYAKOTTAI ராஜவைத்தியர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)