புதன், 31 மே, 2023

IDAYAKOTTAI செங்கோல்


இடையகோட்டை முகைதீன் ஆண்டவர் சந்தனக்கூடு உரூஸ் விழாவில் தர்காவின் 'அஸா' என்னும் செங்கோல் ஏந்தி வரும் இடையகோட்டை ஜமீன் பணியாளர்கள் கோதரர்கள் திரு. சிவகுமார் திரு. ராமதாஸ் திரு. சுப்பிரமணி  திரு.ராஜேந்திர குமார் ஆகியோர்.  இவர்களில் திரு.சிவகுமார் இடையகோட்டை, பாளையத்தின் (ஜமீன்) பரம்பரை டஃபேதார் ஆவார், மற்றவர்கள் ஜமீன்தாரின் மெய்க்காவல் படையினர் ஆவர். 

அமைப்பு 

இருபுறமும் கொடி, மேல்பகுதியில் நடுவில் நட்சத்திரத்துடன் கூடிய பிறையும் அதில் 786 என்று அரபியில் பொறிக்கப்பட்டுள்ளது. முகைதீன் செய்யது அப்துல் காதர் செய்லானி ஆண்டவர்கள் என வடமொழி கலவாத் தமிழில் தெளிவாக உள்ளது. பக்கவாட்டில் அதேபோல் பிறை முத்திரையுடன் தர்கா ஷரீபு, இடையகோட்டை என்ற முகவரியும், ஹிஜ்ரி நாட்காட்டிப்படி 11.04.1358 என அரபியிலும், 31.05.1939 என ஆங்கில நாட்காட்டிப்படியும் தேதி குறிக்கப்பட்டு உள்ளது.






இந்த செங்கோல்கள் ஒவ்வொரு ஆண்டும் உரூஸ் விழாவில் கொடியேற்றம், வாசனைமாலை ஊர்வலங்கள் சந்தனக்கூடு ஊர்வலம் (மூன்று நாட்கள்) என ஐந்து நாட்களும் எடுத்து வரப்படுகின்றன. இடையில் ஜமீன்தார் கலந்து கொள்ளாத பத்து ஆண்டுகளில் கமால் வகையறாவினர் செங்கோல் எடுத்து வந்தனர். புகழ்பெற்ற நாகூர் தர்காவில் வெள்ளித்தகடு அடிக்கப்பட்ட செங்கோல் ஏந்தி பணியாளர்கள் நிற்பதை தினமும் காணலாம். 

இந்த செங்கோல்கள் அனைத்தும் இன்றுடன் 84 ஆண்டுகளை நிறைவு செய்கின்றன. 

1940-ம் ஆண்டு உரூஸ் ஊர்வலத்தில் அஸா (செங்கோல்) ஏந்தி வரும் சீருடை அணிந்த ஜமீன் காவல் படையினர்.




செவ்வாய், 23 மே, 2023

IDAYAKOTTAI கறுப்பு வெள்ளை படங்கள் 1

1940-இல்  உருஸ் ஊர்வலம் ஜமீன்தார் மரியாதை

ஜவஹர்லால் நேரு, காமராஜர், ஆர். வெங்கட்ராமன், பூவராகன், பிஷ்ணு ராம் மேதி, சிவாஜி கணேசன், எம். ஜி.ஆர் ஆகிய பெரும் தலைவர்களின் நெருங்கிய நண்பர் இடையகோட்டை மண்ணின் மைந்தர் கண்ணாடிக்காரர் என்ற M. M. சையது ஹசன் அவர்கள்.


















ஜே. மீரா அவர்கள்


  வாசனைமாலை ஊர்வலம் பெட்ரோமாக்ஸ் விளக்கு ஒளியில்
 
கீழே வாசனைமாலை அலங்காரப்பணியில்
P. M. சையது முகமது அவர்கள்

 
நன்றி : A. W. சையது ஆரிப்