சனி, 17 பிப்ரவரி, 2024

IDAYAKOTTAI வானொலி நினைவுகள்

 ஆறு மணிக்கெல்லாம் எழுந்த பின்பு டீ குடிக்கும் நேரத்தில் ரேடியோவை ஆன் செய்தால் ஆறேகால் மணிக்கு பக்தி இசையுடன் பாடல்கள் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ பாடல்கள் பாகுபாடின்றி அனைவரும் கேட்டு ரசிப்பர். அப்போதெல்லாம் இடையகோட்டை மக்களுக்கு மதுரை வானொலி நிலையத்தை விட திருச்சிராப்பள்ளி வானொலி நிலையம் தான் மிகவும் பிடித்தமானதாகும். தொடர்ந்து வேளாண் அறிவிப்புகள், மாநில செய்திகள்்,  வானிலை அறிவிப்புகள், ஆகாசவாணி செய்திகள், திரைப்படப் பாடல்கள் என எட்டு மணி வரை திருச்சிராப்பள்ளி வானொலி தான். அதன் பின்னர் விவித பாரதி அல்லது இலங்கை வானொலி என காலைப்பொழுது வானொலிவுடன் நகர்ந்து கொண்டிருக்கும். இதில் இன்னொரு நன்மையும் உண்டு அப்போதெல்லாம் பெரும்பான்மையான வீடுகளில் கடிகாரங்கள் கிடையாது நிகழ்ச்சியின் இடையிடையே உரத்த குரலில் ஒளிபரப்பாகும் நேரம் இப்பொழுது எட்டு மணி 13 நிமிடம் என்பதுபோல வழங்கப்படும் நேர அறிவிப்புக்காகவே பலரும் வானொலியை கேட்பதுண்டு. மாணவப் பருவத்தில் ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் ஆகிய ஊர்களில் படித்துக் கொண்டிருந்த பொழுது பல் துுவககுவது, குளிப்பதுு, காலை உணவு சாப்பிட்டு விட்டு பஸ்ஸுக்கு கிளம்புவது என காலையில் கிளம்புவதற்கான கால அட்டவணைைையே வானொலி நிகழ்ச்சிகள் தான். அப்படி ஒரு நாள் காலை 6:15 மணி வழக்கம்போல் வானொலி பட்டியை திருகியதும் மனதைப் பிசையும் சோக இசை ஒளிபரப்பாகிறது இதன் அர்த்தம் ஏதாவது ஒரு முக்கிய பிரமுகர் அல்லது தலைவர் மரணம் அடைந்திருக்க கூடும் என்பதாகும் கவலையுடன் அனைவரும் செய்திகளுக்காக காத்திருக்க தலைப்புச் செய்தியாக ஒளிபரப்பானது அப்போதைய தமிழக முதலமைச்சர் எம்ஜிஆர் காலமானார் என்ற செய்தி.
நிகழ்வு நடந்து கொண்டிருக்கும் நிலையிலேயே முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் செய்திகள் நேரலையாக பரவக்கூடிய இக்கால இளைஞர்களுக்கு உடனடி செய்திகள் என்றால் வானொலி செய்திகள் மட்டுமே என்பது ஆச்சரியத்தை தரும். பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது அதே திருச்சி வானொலியில் காலை 11:40 ஒளிபரப்பாகும் தொடக்கப் பள்ளிகளுக்கு என்ற நிகழ்ச்சியை தவறாமல் கேட்க செய்வார் மறைந்த தலைமையாசிரியர் அப்துல் அஜீஸ் அவர்கள்.
தேர்தல் காலங்களில் கடைவீதி, பேருந்து நிறுத்தங்களில் உள்ள கடைகளில் ஒளிபரப்பாகும் சிறப்பு செய்திகளை கேட்பதற்காக வானொலி முன்பு கூட்டமே கூடிவிடும். பின்னாளில் அதிகாலை 5 30 மணிக்கு தொடங்கும் ஆகாஷ்வாணி நிகழ்ச்சிகளும் வளைகுடா போர் சமயத்தில் பிரபலமடைந்த லண்டன் பிபிசி தமிழோசை, சீன பேஜிங் வானொலி தமிழ் நிகழ்ச்சிகள் ஆகியவை மறக்க முடியாத வானொலி அனுபவங்கள் 2003 ஆம் ஆண்டு உலக மக்கள் தொகை தினத்தன்று கொடைக்கானல் கோடை பண்பலை வானொலி நிலையத்தில் ஒளிபரப்பான நேயர்கள் தொலைபேசி மூலம் உரையாடும் வானவில் நிகழ்ச்சியில் மக்கள் தொகை விழிப்புணர்வு குறித்து பேசி பலராலும் பாராட்டப்பட்டது என்றும் மறக்க முடியாது.

1946 ஆம் ஆண்டு ஐநா சபை வானொலி துவக்கப்பட்ட நாளான பிப்ரவரி 13ஆம் தேதி சர்வதேச வானொலி தினமாக கடைபிடிக்கப்படுகிறது வானொலி பிரியர்கள் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துகள்.

கடந்த பிப்ரவரி 13 அன்று உலக வானொலி தினத்துக்காக முகநூலில் வெளியிடப்பட்ட எனது பதிவு 

இத்துடன் அப்பதிவுக்கான முகநூல் தோழர்கள் சிலரின் பின்னூட்டங்களையும் இணைத்துள்ளேன். அவை

திருமிகு. ஹெலன் ராமசாமி :          உலக வானொலி தினம்!
பண்பாட்டு அமைப்பு (UNESCO) 2011 நவம்பர் 3 ஆம் நாள் உலக வானொலி நாளாக உத்தியோகபூர்வமாக  அறிவித்தது. உலக வானொலிகளை, ஒலிப்பரப்பாளர்களை , நேயர்களை ஒன்றிணைக்கவும் வானொலி கூட்டுறவை ஏற்படுத்தவும் தகவல்களை பகிர்ந்து கொள்ளவும் உலக மயமாக்கலில் வானொலி ஒர் உன்னத சேவையை புரிந்து வருகிறது. பல்வேறு தொழில்நுட்ப முறைகள் மூலமாக வானொலி ஒலிபரப்பப்பட்டு வருகிறது..
வீச்சுப் பண்பேற்றம் ஒலிபரப்பு, அதிர்வெண் பண்பேற்ற ஒலிபரப்பு, செயற்கைக்கோள் வானொலி ஒலிபரப்பு, இணையதள வானொலி ஒலிபரப்பு,
FM வானொலிகள், வயர்லெஸ் வானொலிகள், குறுகிய பிராந்திய சேவைகள், WIFI வானொலி சேவைகள், முகநூல் நேரலைகள், இணையத்தள வானொலிகள், மூலமாக வானொலிகள் இயங்கி வருகிறது.

மிகவும் பழைமையான ஊடகமாக மக்களின் தோழனாக வானொலி மக்களின் வாழ்வியலோடு கலந்துவிட்டது.நமது இலங்கை வானொலியானது ஆசியாவில் முதலில் ஆரம்பிக்கப்பட்ட வானொலி நிலையமாக சிறப்பு பெறுகிறது.மேலும் பல தனியார் வானொலிகள், இணைய வானொலிகள் மிகவும் சிறப்பாக இயங்கி வருகிறது.நமது நாட்டு அனைத்து வானொலி+வானொலியியலாளர்கள் உலகளவில் பிரபலமானவர்கள் இன்று சர்வதேச வானொலி இயக்குனர்கள் அனைவருமே இலங்கையை சார்ந்தவர்களே!
நானும் ஒர் வானொலியில் ஒலிப்பரப்பாளராக பணியாற்றிய இனிமையான தருணங்களுடன் .. இலங்கையிலுள்ள அனைத்து ஒலிப்பரப்பாளர்களுக்கும் சர்வதேச வானொலி கலைஞர்களுக்கும் உலக வானொலி தினம் இனிய நல் வாழ்த்துக்கள்!
கே.ஆர்.ஹெலன்
www.staroliradio.com

 திருமிகு. கஸ்தூரி காமாட்சி :       நான் சிறுவனாக இருந்த போது அதாவது 1950ல் இடையகோட்டையில் இஸ்லாமிய திருவிழா வருடம் தோறும் நடைபெறும் . அப்போது நாகூர் ஹனிபா பாட்டு கச்சேரி இரவு நடைபெறும்.அதை கேட்க நவமரத்துபட்டியிலிருந்து நான் மற்றும் எனது உறவினர்கள் வந்து திரும்புவோம்.
இடையகோட்டையில் இருந்து ஒரு ஆசிரியர் வேடசந்தூரில் எனக்கு ஆசிரியராக இருந்தார்.அவர் பெயர் மறந்து விட்டது.
மேலும் இஸ்மாயில் என்பவர் என்னுடன் நெடுஞ்சாலை துறையில் வேலை பார்த்தார்.மேலும் இடையகோட்டை பஸ் நிலையத்தில் என்னுடன் படித்தவர் மேற்கு பார்த்த துணிக்கடை வைத்து இருந்தார்.
எனக்கு இப்போது 78 வயது.பழைய நினைவு










வானொலி படங்கள்: கூகுள் தேடுபொறியில் கிடைத்தவை