செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

உருஸ் விழா,மீலாத் கந்தூரி







இந்த ஆண்டுக்கான உருஸ் விழா 23-02-2012 அன்று கொடியேற்றப்பட்டு துவங்கியது. முக்கிய நிகழ்வாக புதிய தலைமுறை நண்பர்கள் குழுவினரால் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் அடையாளமாக ஈதே மீலாத் கந்தூரி (முசாபிர் கானாவில்) சிறப்புற நடைபெற்றது.கொடி ஏற்றத்துக்காக
மதியம் முதல் வந்திருந்த வெளியூர்காரர்களும், உள்ளூர்காரர்களும் ஆர்வத்துடன் நிகழ்ச்சியில் மனமார கலந்துகொண்டு வயிறார விருந்துண்டு சென்றனர்.சாதி மத பேதம் இன்றி அனைவரும் கலந்துகொண்ட நல்லிணக்க விருந்தாக அமைந்தது இந்த கந்தூரி நிகழ்வு. வரும் ஆண்டுகளிலும் இந்நிகழ்ச்சி நடைபெறவும், புதியதலை முறை நண்பர்கள் குழு மக்கள் மனதில் இடம் பெறவும் நமது அன்பான வாழ்த்துக்களும், துஆக்களும்.

வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

பழங்கால தெருவிளக்கு



இந்தியாவிலேயே முதல் முறையாக கிராம பஞ்சாயத்து ஒன்றில் சோடியம் விளக்கு பொருத்தப்பட்டது நமது இடையகோட்டை ஆகும்(07- 01- 1984).
K.P.V.S & Co,சென்னை-நிறுவனத்தால் வழங்கப்பட்ட ஏழு விளக்குகள் மூலம் இடையகோட்டையின் தெருக்களில் ஒளி வீசச்செய்யப்பட்டது. இதற்க்கான துவக்கவிழா மிக விமரிசையாக அப்போது கொண்டாடப்பட்டது.ஆனால் பழங்காலத்தில் எண்ணெய் விளக்குகள் தான் பயன்படுத்தப்பட்டது. கால வெள்ளத்தில் அத்தகைய விளக்குகள் இல்லாமல் போனாலும் தற்போது ஒரே ஒரு விளக்கின் கூண்டு மட்டும் கண்ணாடிகள் தொலைந்துபோய் இன்றும் தூணுடன் உள்ளது. பழமையை பறைசாற்றும் அந்த விளக்கின் படமும் ,மேலே கூறப்பட்ட சோடியம் விளக்கு துவக்க விழாவுடைய கல்வெட்டின் ஒளிப்படமும் உங்களுக்காக இங்கே.

வாசகர்களுக்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்

இன்று வரை நமது வெப்சைட்டை பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை 447 ஆகவுள்ளது. இதில் அமெரிக்கா, துருக்கி உள்ளிட்ட வெளிநாட்டவர்களும் உள்ளனர். நமது இணையதள வாசகர்களின் வசதிக்காக கருத்துரை இடும்வசதி எளிதாக்கப்பட்டுள்ளது. எனவே உங்களின் மேலான பயனுள்ள கருத்துக்களையும், ஆலோசனைகளையும் comments பகுதியில் தெரிவித்து எங்களின் முயற்சிகளை வெற்றி பெற செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நமது இடையகோட்டையின் பழம்பெருமைகளையும், சிறப்புகளையும் நவீன ஊடகமான இணையத்தளம் வாயிலாக உலகெங்கும் பறைசாற்றுவோம். வாசகர்களுக்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்.