என்ன நண்பர்களே டிசம்பர் 21 -ல உலகம் அழியப்போகுதுன்னு பீதிய கெளப்புராங்களே இது உண்மையா ?
இதுக்கு முன்னாடிகூட 1985 -ல ஸ்கைலாப் செயற்கைக்கோள் பூமில மோதி உலகம் அழியும்னு சொன்னாங்க,
அப்புறம் 1997-ல ஷூ மேக்கர்-லெவி வியாழன் கிரகத்துல மோதும்போது ம் ,1999 டிசம்பர் 31 அன்னக்கி, 2002-ல ,8-8-2008, 10-10-2010 இப்படி
பல தடவை இந்தமாதிரி டர்ர்ர கெளப்பிவிட்டுருக்காங்க.அறிவியல் அடிப்படையில
பூமியோட ஆயுள் இன்னமும் 500வருடங்கள் இருக்கிறதாக விஞ்ஞானிகள் சொல்றாங்க .ஆன்மீக
அடிப்படையில உலக மக்கள்தொகையில 2/3 அளவுக்கு மக்கள் கடைபிடிக்கிறது
கிறிஸ்தவ, முஸ்லிம் மதங்களைத்தான் இந்தரெண்டு தரப்புமே ஏசுநாதர்
(முஸ்லிம்களுக்கு ஈசா நபி) வந்தப்புறம்தான் உலகம் அழியும்னு
நம்புறாங்க.(அப்படி ஏசுநாதர் நாளைக்கே வந்தாலும் நாற்பது வருடம் அவர் ஆட்சி
செஞ்சப்புறம் தான் உலகம் அழியும் அதுனால கொறஞ்சது நாப்பது வருடம் எதுவும்
ஆகாது) இதுக்கு முன்னாடி 100 வருடங்களுக்கு முன்ன பூமிமீது ஒரு விண்கல்
தாக்குனப்போ சுமார் 40000 (அமெரிக்க கண்டத்துல )பேர் இறந்தாங்க. அதே அளவு
விண்கல் மறுபடியும் தாக்குறதுக்குகூட தற்சமயம் வாய்ப்பில்லை. பூகம்பம்
வந்தாக்கூட பூமி முழுவதும் அழியாது.எனவே மக்களே யாராச்சும் உலகம்
அழியப்போகுதுன்னு சொன்ன அவங்ககிட்ட உலகமே அழியும் போது உங்க சொத்து ,
பணத்தையெல்லாம் எனக்கு கொடுங்கன்னு கேளுங்க. என்ன ஓகேவா? நிம்மதியா இருங்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக