ஞாயிறு, 16 டிசம்பர், 2018

IDAYAKOTTAI - கஜா புயல்

தாய்லாந்து நாட்டில்தான் உலகிலேயே அதிகமாக வெள்ளை நிற யானைகள் உள்ளன . நாம்  பார்க்கும் கருப்பு நிற யானைகள் அங்கு அபூர்வம் . தாய்லாந்து மொழியில் கருப்பு யானையை குறிக்கும் சொல்தான் கஜா. 

அதனால்தானோ என்னவோ மதம் கொண்ட யானை போல் 16.11.2018 வெள்ளிக்கிழமை இடையகோட்டையை புரட்டிப் போட்டது கஜா புயல் வேம்பு, கருவேலம், வாழை போன்ற நூற்றுக்கணக்கான மரங்கள் , மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள், மின்கம்பங்கள் வீட்டுக்கூரைகள் என ஒரு காட்டு காட்டிவிட்டுப் போன புயலின் பாதிப்புகள் சற்றே அதிகம்தான்.

      1977 & 1993 வெள்ள பாதிப்புகள் 2005 நங்காஞ்சி அணை உடைந்தது போன்ற இயற்கை சீற்றங்களை எதிர்கொண்ட நமதூர் மக்களுக்கு இது புது அனுபவம் போல் தோன்றினாலும் உண்மையிலேயே நமது ஊருக்கு இது புதிதல்ல என்பதே உண்மை.
       
  1. இளவேனில் - சித்திரை, வைகாசி
  2. முதுவேனில் - ஆனி, ஆடி
  3. கார் - ஆவணி, புரட்டாசி
  4. கூதிர் - ஐப்பசி, கார்த்திகை
  5. முன்பனி - மார்கழி, தை
  6. பின்பனி - மாசி, பங்குனி
சற்றே பின்னோக்கி செல்வோம் நமது தமிழ் இலக்கியங்களில் சொல்லப்பட்ட பருவ கால வகைகளில் (பெரும்பொழுதுகள் )  வரும் கார் காலம் என்பது  சுழன்றடிக்கும் காற்றுடன் மழை பெய்யும்காலம் ஆகும்.
      என்றாலும் இலக்கியத்துக்கும் நடைமுறைக்கும் இடையே மாறுபாடு இருக்கத்தான் செய்கிறது எனவேதான் நடைமுறை அனுபவங்களை வைத்து புரட்டாசியில் மழை புரண்டு உருண்டு பெய்யும்(இடி மின்னல் அதிகம் ), ஐப்பசியில் அடைமழை (பலநாட்களுக்கு விடாது பெய்யும் ), கார்த்திகையில் கார்மழை (கடும் காற்றுடன் மழை ) என பழமொழி கூறியுள்ளனர் .
   இன்றைய நவீன தொழில் நுட்பத்தில் புயல் குறித்து கணிப்புகளும் அதிக வதந்திகளும் நமதூர் போன்ற உள்மாவட்டப் பகுதிவரை தெரிந்துள்ளது .
உண்மையில் இந்த புயல் முன்பு சொன்ன கார்மழைதான்.1982ஆம் ஆண்டில் பெய்த கார்மழை காரணமாக பல குடிசைகளும் சில ஓட்டு வீடுகளும் சேதமடைந்தது மூத்தோர் பலருக்கும் நினைவிருக்கலாம்.
ஆனால் அப்போதெல்லாம் மழைக்காலத்துக்கு முன்பே முன்னெச்சரிக்கையாக செயல்பட்டு விவசாய இழப்புகளை தவிர்த்து வந்துள்ளனர்.அப்போது  புயல் என்பது கடலோரப்பகுதிகளில் ஏற்படும் ஒரு நிகழ்வாகவே அறியப்பட்டது .
இன்றைய வாழ்க்கைமுறை நவீனம் என்ற பெயரில் நமது சிந்தனைகளை பூட்டு போட்டதால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு கஜா புயலை காரணம் கட்டுவது சரியல்ல. இனியாவது விழிப்புணர்வுடன் இருப்போம் .மரங்களை சரியாக கவாத்து செய்தும் முள்கம்பி வேலிக்கு பதிலாக இயற்கையான முறையில் வேலி அமைத்தும், இவ்வாறு அமைக்கப்படும் வேலிக்கருவை மரங்கள் மூலம் காற்றின் வேகம் மட்டுப்படும்.(சீமைக்கருவை அல்ல) ஓடைகள், கால்வாய் போன்ற நீர்வடிகால்களை நமது பகுதிகளில் நாமே தூர்வாரியும் வெள்ளப்பாதிப்பை தவிர்க்கலாம்
ஏற்கனவே பல்வேறு வழிகளில்இயற்கையை அழித்து பருவகால மாறுபாட்டை உருவாக்கிவிட்டது நம் மனித இனம் இனியாவது விழிப்புடன் இருப்போம் .இயற்கையோடியியைந்த வாழ்க்கை வாழ்வோம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக