ஞாயிறு, 7 ஏப்ரல், 2024

IDAYAKOTTAI ஜெயராஜ் சார்


       தலைமை ஆசிரியராக கல்விக்கு மட்டும் இல்லாமல் கலை, விளையாட்டு, சுற்றுலா என மாணவர்களை பக்குவப்படுத்தும் அனைத்து விஷயங்களிலும் மிகுந்த அக்கறை கொண்டிருந்தவர் ஐயா ஜெயராஜ் சார் அவர்கள். ஆசிரியராக இருந்து பதவி உயர்வில்  தலைமை ஆசிரியராக இடையகோட்டை நேருஜி அரசு மேல்நிலைப் பள்ளியில் பணி ஏற்ற ஐயா அவர்கள் தனது பணி நிறைவு வரை ஐந்தாண்டுகள் நமது பள்ளியில் பணியாற்றினார்.

    அவர் பணியாற்றிய 5 ஆண்டுகளும் மாணவர்களுக்கு பொற்காலம். பள்ளியில் மாணவர் நலன் சார்ந்து பல்வேறு செயல் திட்டங்களை தீட்டியவர், பரந்து விரிந்த விளையாட்டு மைதானத்தில் ஃபுட்பால் கிரவுண்ட், பேஸ்கெட் பால் கிரவுண்ட் என பயனுள்ள அம்சங்களை உருவாக்கினார். நடுவில் மைதானம் சுற்றிலும் குளுமை தரும் வேப்ப மரங்கள் என அப்போதைய விவசாய ஆசிரியர் திரு.கந்தசாமி அவர்களின் ஒத்துழைப்புடன் மாணவர்களின் அர்ப்பணிப்பு மிக்க செயல்பாட்டில் செதுக்கப்பட்டது நம் பள்ளி என்றால் அது மிகையில்லை. 

    அவர் பணியாற்றிய 5 ஆண்டுகளும் கல்வி சுற்றுலா ஏற்பாடு செய்து மாணவர்களை அழைத்துச் சென்றார் அதேபோல் மாணவர்களின் கலை திறனையும் விளையாட்டு ஆர்வத்தையும் வெளிப்படுத்த ஆண்டுதோறும் ஆண்டு விழாக்கள் நடத்தினார் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நெருங்கியதும் பள்ளியிலேயே தங்கி மாலை நேரங்களில் மாணவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று படிக்க தூண்டுவார். 

      தினமும் மாலை பள்ளி முடிந்ததும மாணவர்களுடனும் ஆசிரியர்களுடனும் கைப்பந்து பேட்மிண்டன் விளையாட்டுகளை விளையாடுவார் கிராமப்புற மாணவர் மாணவிகள் பத்தாம் வகுப்பு உடன் பள்ளி பதிப்பை முடித்து விடுவது பார்த்து பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்திட உள்ளூர் பிரமுகர்களுடன் சேர்ந்து முயற்சிகளை மேற்கொண்டார் அவரிடம் பயின்ற 2002 பேட்ச் பத்தாம் வகுப்பு மாணவ-மாணவிகளான  எங்களுக்கு என்றுமே சூப்பர் ஸ்டார் எங்கள் ஜெயராஜ் சார்  என்பதுதான் உண்மை.

       மிக நீண்ட காலத்திற்கு பிறகு 30.03.2024 சனிக்கிழமையன்று அவரை அவரது வீட்டில் சந்தித்தோம் இடையகோட்டையில் பணியாற்றிய காலத்தையும் அங்கு தன்னுடைய செயல்பாட்டையும் மிகவும் ஆர்வத்துடனும், நெகிழ்ச்சியுடனும் எங்களிடம் பகிர்ந்து கொண்டார். ஒவ்வொரு ஆசிரியரும் தங்களது பணி காலத்தில் நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகளை சந்தித்திருப்பார்கள். ஆனால் அனைவரையும் நினைவு வைத்திருப்பது சாத்தியமில்லை. ஜெயராஜ் சார் அவர்கள் தான் பணியாற்றிய காலத்தில் பள்ளியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளின் புகைப்பட தொகுப்புகளை இன்றைக்கும் தனது வீட்டில் பத்திரமாக பாதுகாத்து வருகிறார் என்பது அவர் நம் மீது கொண்டிருந்த பாசத்தின் அளவுகோலை காட்டும் 

நெகிழ்ச்சியுடன்,

இம்ரானா & ராணி