ஞாயிறு, 30 டிசம்பர், 2012

இடையகோட்டையில் ஒரு அறிவுக்களஞ்சியம்




நம்ம ஊர்ல எவ்வளவோ விஷயங்கள் நமக்குத்தெரியாம இருக்குது.அப்படிப்பட்ட ஒண்ணுதான் நம்மூரு அறிவுக்களஞ்சியமான மாவட்ட கிளை நூலகம் இது எங்க  இருக்குதுன்னு கேக்கறீங்களா ? இடையகோட்டை ஹை ஸ்கூல் பஸ் ஸ்டாப்ல இருந்து டேமுக்குப் போறவழியில ஜமின்தார் அரண்மனைக்குப்பக்கத்துல மெயின் ரோட்டுலயே இருக்குது.
     
    இந்த லைப்ரரியப்பத்தி இதனோட நூலகர் திரு.A .பாஸ்கர் அவர்கள் கூறும்போது ,"இந்த நூலகம் 30-03-1964 இல் வாடகை கட்டிடத்தில் துவக்கப்பட்டு பின்னர் தற்போதுள்ள சொந்த கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது.

இங்குள்ள நூல்கள்  மொத்தம்  சுமார்---------------------19324
உறுப்பினர்களின் எண்ணிக்கை----------------------------2783
தமிழ் நாளிதழ்கள் எண்ணிக்கை----------------------------13
ஆங்கில நாளிதழ்களின் எண்ணிக்கை--------------------3
பருவ இதழ்கள் (வார இதழ்கள்,மாத இதழ்கள்)----------81

     இங்கு கலை,அறிவியல்,தொழில்நுட்பம்,வரலாறு,சட்டம், இலக்கியம்,அரசியல்,பல்வேறு மத ஆன்மிகம்,பண்பாடு,சுயசரிதை,ஆய்வுக் கட்டுரைகள்,கணினி மற்றும் கல்வி  சார்ந்த நூல்களும் கோலன் பகுப்பு முறையில் வரிசைப்படுத்தப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டுக்காக வைக்கப்பட்டுள்ளன.வாரம்தோறும் வெள்ளிகிழமை மற்றும் மாதம்தோறும் இரண்டாவது சனிக்கிழமைகளிலும் விடுமுறையாகும். மற்ற  நாட்களில் காலை ,மாலை இரு நேரங்களிலும் திறக்கப்பட்டிருக்கும்.உறுப்பினராக காப்புத்தொகை ரூபாய் 15.00(பதினைந்து மட்டும் ) ஆண்டுச்சந்தா ரூபாய் 5.00 (ஐந்து மட்டும்)வசூலிக்கப்படுகிறது என்றார்.

[இந்த கட்டணங்கள் புத்தகங்களை வீட்டுக்கு எடுத்துசென்று படிப்பதற்கு மட்டுமே, நூலகத்திலேயே படிப்பதற்கு அனுமதி முற்றிலும் இலவசம் ]

 நம்மூர்ல இப்படிப்பட்ட ஒரு அறிவுக்களஞ்சியம் இருக்குறப்போ வேற பொழுதுபோக்கத்  தேடி நாம ஏன் அலையணும்.பேரறிஞர் அண்ணா அவர்களே குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு வீட்டுக்கொரு நூலகம் வேண்டும்னு சொல்லியிருக்காரு வீட்டுகொரு நூலகம் வைக்கமுடியலைன்னாலும் ஊர் நூலகத்தையாவது நல்லமுறையில பயன்படுத்தலாமே .   அப்புறமென்ன லைப்ரரிக்கு கெளம்பிட்டீங்களா? 

திங்கள், 10 டிசம்பர், 2012

உலகம் அழியுதா?

என்ன நண்பர்களே டிசம்பர் 21 -ல உலகம் அழியப்போகுதுன்னு பீதிய கெளப்புராங்களே இது உண்மையா ?
இதுக்கு முன்னாடிகூட 1985 -ல ஸ்கைலாப் செயற்கைக்கோள் பூமில மோதி உலகம் அழியும்னு சொன்னாங்க,
அப்புறம் 1997-ல ஷூ மேக்கர்-லெவி வியாழன் கிரகத்துல மோதும்போது ம் ,1999 டிசம்பர் 31 அன்னக்கி, 2002-ல ,8-8-2008, 10-10-2010 இப்படி பல தடவை இந்தமாதிரி டர்ர்ர கெளப்பிவிட்டுருக்காங்க.அறிவியல் அடிப்படையில பூமியோட ஆயுள் இன்னமும் 500வருடங்கள் இருக்கிறதாக விஞ்ஞானிகள் சொல்றாங்க .ஆன்மீக அடிப்படையில உலக மக்கள்தொகையில 2/3 அளவுக்கு மக்கள் கடைபிடிக்கிறது கிறிஸ்தவ, முஸ்லிம் மதங்களைத்தான் இந்தரெண்டு தரப்புமே ஏசுநாதர் (முஸ்லிம்களுக்கு ஈசா நபி) வந்தப்புறம்தான் உலகம் அழியும்னு நம்புறாங்க.(அப்படி ஏசுநாதர் நாளைக்கே வந்தாலும் நாற்பது வருடம் அவர் ஆட்சி செஞ்சப்புறம் தான் உலகம் அழியும் அதுனால கொறஞ்சது நாப்பது வருடம் எதுவும் ஆகாது) இதுக்கு முன்னாடி 100 வருடங்களுக்கு முன்ன பூமிமீது ஒரு விண்கல் தாக்குனப்போ சுமார் 40000 (அமெரிக்க கண்டத்துல )பேர் இறந்தாங்க. அதே அளவு விண்கல் மறுபடியும் தாக்குறதுக்குகூட  தற்சமயம் வாய்ப்பில்லை. பூகம்பம் வந்தாக்கூட பூமி முழுவதும் அழியாது.எனவே மக்களே யாராச்சும் உலகம் அழியப்போகுதுன்னு சொன்ன அவங்ககிட்ட உலகமே அழியும் போது உங்க சொத்து , பணத்தையெல்லாம் எனக்கு கொடுங்கன்னு கேளுங்க. என்ன ஓகேவா? நிம்மதியா இருங்க.

வெள்ளி, 21 செப்டம்பர், 2012

ஆபியும் மீனும்


இது அபியும் நானும்  திரைப்படம் அல்ல ஆபியும் மீனும் ஒளிப்படம் 

அன்புள்ள நண்பர்களே ,

அன்புள்ள நண்பர்களே ,
     கடந்த சில நாட்களில் உங்களை தொடர்புகொள்ள முடியாமைக்கு வருந்துகிறேன்.எனது இணைய இணைப்பில் ஏற்ப்பட்ட சிக்கலால் இவ்வாறு நேரிட்டது.   இனிமேல் அவ்வப்போது உங்களை தொடர்பு கொள்வேன்.நன்றி !!

வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா

இப்போது நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் இன்றுவரை இந்தியாவுக்கு ஒரே ஒரு வெண்கலப்பதக்கம் மட்டுமே கிடைத்துள்ளது. டென்னிஸ் ,பேட்மிண்டன் ஆகிய விளையாட்டுக்களில் எதோ கொஞ்சம் நம்பிக்கை தெரிகிறது அதுவும் கூட உறுதியில்லை . ஹாக்கியிலோ பழைய பெருமையை இழந்து பல ஒலிம்பிக் ஆண்டுகளாகிவிட்டது.அப்படியானால் நமது நாட்டுக்கு ஒலிம்பிக் பதக்கங்கள் அதிகம் கிடைக்காதா? விளையாட்டுதுறையில் நம் நாடு எத்தியோப்பியா ருமானியா நாடுகளைவிட நாம் கேவலமான நிலையில் இருக்கக் காரணம் என்ன? யாராவது சொல்லுங்களேன்.

செவ்வாய், 6 மார்ச், 2012

உரூஸ் விழா வாணவேடிக்கை

உரூஸ் விழாவின் சிறப்பம்சமான வாணவேடிக்கை நிகழ்ச்சியின் ஒளிப்பதிவு (05-03-2012) வீடியோவைக் காண படத்தில் உள்ள PLAY குறியீடின்மீது க்ளிக் செய்யவும்.

உரூஸ் விழாவின் ஒளிப்படங்கள் 1


இடையகோட்டையில் களைகட்டிய உரூஸ் விழாவின் ஒளிப் படங்கள் மற்றும் உரூஸ் ஊர்வலத் துவக்க நிகழ்ச்சியின் வீடியோ காட்சி வீடியோவைக் காண படத்தில் உள்ள PLAY குறியீட்டை க்ளிக் செய்யவும்







செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

உருஸ் விழா,மீலாத் கந்தூரி







இந்த ஆண்டுக்கான உருஸ் விழா 23-02-2012 அன்று கொடியேற்றப்பட்டு துவங்கியது. முக்கிய நிகழ்வாக புதிய தலைமுறை நண்பர்கள் குழுவினரால் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் அடையாளமாக ஈதே மீலாத் கந்தூரி (முசாபிர் கானாவில்) சிறப்புற நடைபெற்றது.கொடி ஏற்றத்துக்காக
மதியம் முதல் வந்திருந்த வெளியூர்காரர்களும், உள்ளூர்காரர்களும் ஆர்வத்துடன் நிகழ்ச்சியில் மனமார கலந்துகொண்டு வயிறார விருந்துண்டு சென்றனர்.சாதி மத பேதம் இன்றி அனைவரும் கலந்துகொண்ட நல்லிணக்க விருந்தாக அமைந்தது இந்த கந்தூரி நிகழ்வு. வரும் ஆண்டுகளிலும் இந்நிகழ்ச்சி நடைபெறவும், புதியதலை முறை நண்பர்கள் குழு மக்கள் மனதில் இடம் பெறவும் நமது அன்பான வாழ்த்துக்களும், துஆக்களும்.

வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

பழங்கால தெருவிளக்கு



இந்தியாவிலேயே முதல் முறையாக கிராம பஞ்சாயத்து ஒன்றில் சோடியம் விளக்கு பொருத்தப்பட்டது நமது இடையகோட்டை ஆகும்(07- 01- 1984).
K.P.V.S & Co,சென்னை-நிறுவனத்தால் வழங்கப்பட்ட ஏழு விளக்குகள் மூலம் இடையகோட்டையின் தெருக்களில் ஒளி வீசச்செய்யப்பட்டது. இதற்க்கான துவக்கவிழா மிக விமரிசையாக அப்போது கொண்டாடப்பட்டது.ஆனால் பழங்காலத்தில் எண்ணெய் விளக்குகள் தான் பயன்படுத்தப்பட்டது. கால வெள்ளத்தில் அத்தகைய விளக்குகள் இல்லாமல் போனாலும் தற்போது ஒரே ஒரு விளக்கின் கூண்டு மட்டும் கண்ணாடிகள் தொலைந்துபோய் இன்றும் தூணுடன் உள்ளது. பழமையை பறைசாற்றும் அந்த விளக்கின் படமும் ,மேலே கூறப்பட்ட சோடியம் விளக்கு துவக்க விழாவுடைய கல்வெட்டின் ஒளிப்படமும் உங்களுக்காக இங்கே.

வாசகர்களுக்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்

இன்று வரை நமது வெப்சைட்டை பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை 447 ஆகவுள்ளது. இதில் அமெரிக்கா, துருக்கி உள்ளிட்ட வெளிநாட்டவர்களும் உள்ளனர். நமது இணையதள வாசகர்களின் வசதிக்காக கருத்துரை இடும்வசதி எளிதாக்கப்பட்டுள்ளது. எனவே உங்களின் மேலான பயனுள்ள கருத்துக்களையும், ஆலோசனைகளையும் comments பகுதியில் தெரிவித்து எங்களின் முயற்சிகளை வெற்றி பெற செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நமது இடையகோட்டையின் பழம்பெருமைகளையும், சிறப்புகளையும் நவீன ஊடகமான இணையத்தளம் வாயிலாக உலகெங்கும் பறைசாற்றுவோம். வாசகர்களுக்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்.