மதிப்புமிகு தேர்தல் அதிகாரி அவர்களுக்கு
வணக்கம்
தேசிய வாக்காளர் தினம் [ஜனவரி 25] கொண்டாடும் இந்த நேரத்தில் தங்களுக்கும் நம் நாட்டு மக்களுக்கும் வாக்காளர் தின வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக்கொள்வதுடன், ஜனநாயகத்தின் வலிமைமிகு ஆயுதமான தேர்தல் வாக்குப்பதிவு முறையில் ஒரு சிறிய மாற்றத்தை செய்வதன் மூலம் தேர்தல் ஜனநாயகத்தை மேம்படுத்தலாம் என்று எண்ணுகிறோம்.
தற்போதுள்ள 49 ஓ முறையில் அதைப்பயன்படுத்துவோரை அடையாளம் காணப்பட்டு அரசியல்வாதிகளால் தனிமைப்படுத்தப்பட வாய்ப்புள்ளது எனவே யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்களுக்கான 49 ஓ வாய்ப்பை தனி படிவத்தில் வழங்குவதற்கு பதிலாக வாக்குப்பதிவு இயந்திரத்தில்
49 ஓ- வுக்கென கூடுதலாக ஒரு பட்டனை அமைத்து விடுவதன் மூலம் வாக்காளரின் ரகசியத்தன்மை காக்கப்படும். அவ்வாறு தேர்தல் நடக்கும்போது மற்ற வேட்பாளர்களைவிட 49 ஓ- வுக்கு அதிக வாக்குகள் பதிவானால் அந்த தொகுதிக்கு ஒரு மாத இடைவெளிக்குள் மறு தேர்தல் நடத்தலாம்.
மேலும் முன்னதாக நடந்த தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் (கணவன் ,மனைவி ,மகள், மகன், பெற்றோர்,பேரன்,பேத்தி,மருமகள் ஆகியோர் ) மறுதேர்தலில் போட்டியிடத்தடை விதிக்கலாம் இதன்மூலம் மக்களுக்குப் பிடிக்காதவர்கள் பதவிக்கு வருவதைத் தடுக்க முடியும். மேலும் அரசியல்வாதிகளும் மக்கள் நிராகரித்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் நேர்மையாக மக்கள் பணியாற்ற முற்படுவார்கள்.
நேர்மையான தேர்தல் முயற்சியில் ஈடுபட்டுள்ள தாங்கள் எம்முடைய இந்த ஆலோசனையைப் பரிசீலிப்பீர்கள்
என்ற நம்பிக்கையுடன்
சாதாரண வாக்காளன்
{இந்த கட்டுரை நகல் மதிப்புமிகு தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி அவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது}
புதன், 23 ஜனவரி, 2013
வெள்ளி, 11 ஜனவரி, 2013
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
பழையன கழிதலும்
புதியன புகுதலும் நலமேயாம்
வாழையடி வாழையாய் வந்த
நல்லதோர் முதுமொழியாம்
தைமாதமதில் தைதிருநாள் பொங்கலதில்
விடியும் வேளை நாமெழுந்து நீராடி
நற்காலைப் பொழுதினிலே
பொங்கல் விழா தனிப்பெருந்
திருவிழாக்கோலம் பூணுகிறது.
தைப்பொங்கல் திருவிழா என்பது
ஒரு சமய விழா அல்ல!
தமிழரின் பண்பாட்டு விழா!
தமிழரின் தமிழ்ப் புத்தாண்டு
கொண்டாடும் நாள்!
அனைவருக்கும் இனிய
பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
kavithaivalthukal.blogspot.inபுதியன புகுதலும் நலமேயாம்
வாழையடி வாழையாய் வந்த
நல்லதோர் முதுமொழியாம்
தைமாதமதில் தைதிருநாள் பொங்கலதில்
விடியும் வேளை நாமெழுந்து நீராடி
நற்காலைப் பொழுதினிலே
பொங்கல் விழா தனிப்பெருந்
திருவிழாக்கோலம் பூணுகிறது.
தைப்பொங்கல் திருவிழா என்பது
ஒரு சமய விழா அல்ல!
தமிழரின் பண்பாட்டு விழா!
தமிழரின் தமிழ்ப் புத்தாண்டு
கொண்டாடும் நாள்!
அனைவருக்கும் இனிய
பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
கலியுகப் பொங்கல் கவிதை
வாசல்களில்
மின் விளக்கு அடுப்பில்
தெர்மாகோல் பொங்கல்
'Happy Pongal" வாசகங்களுடன்.
பொங்கலின் பொருள் தெரியா
கழுத்துப் பட்டை
மென் பொறியாளர்களுக்கு
மின்னஞ்சல் உதடுகள்
காதலியரிடமிருந்து.
தமிழன்
'எப்போது பொங்குவான்
தன் நிலைகண்டு'
பட்டிமன்றங்கள் பொதிகையில்.
ரங்கநாதன் தெருக்களிலும்
பிட்சா கார்னர்களிலும்
நகைக்கடைகளிலும்
கொடிகட்டிப் பறக்கும்
விடுமுறை வருமானம்
வலிகளின் வரவால்
எலிகளைத் தின்று
வளைகளில் வாடும்
விவசாயத் தோழன் மட்டும்
கடன் வாங்கிப் பொங்குகிறான்
பொங்கல்.
பொங்கலோ பொங்கல்.
பொங்கலோ பொங்கல்.
- கவிஞர் சேவியர்
நன்றி: kavithaivalthukal.blogspot.in
ஞாயிறு, 6 ஜனவரி, 2013
மின்வெட்டு
நம்மை உச்சகட்ட கடுப்பில் ஆழ்த்தும் விஷயம் மின்வெட்டு போதுமான மின்உற்பத்திக்கு வகை செய்யாமல் புதிது புதிதாக பெரும் தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்குவது
மின்சார சாதனங்களை லட்சக்கணக்கில் இலவசமாக (வண்ணத் தொலைக்காட்சி,மிக்ஸி,கிரைண்டர்,.'.பேன் )வழங்கியது ஆகியவையும் மின்வெட்டுக்கு காரணமாகின்றன.
ஒரு வண்ணத் தொலைக்காட்சிக்கு 60 வாட்ஸ், மிக்சிக்கு 650 வாட்ஸ்,கிரைண்டருக்கு 350வாட்ஸ், . '. பேனுக்கு 60வாட்ஸ் இதுஎல்லாமே ஒரு மணிநேரத்துக்குத் தேவையான மின்சாரமாகும்.
என்ன புரியலியா?
உதாரணத்துக்கு ஒரு வண்ணத் தொலைக்காட்சிக்கு 60வாட்ஸ் மின்சாரம் தேவைப்பட்டாக்கூட 40லட்சம் டிவிகளுக்கு இருபத்துநான்கு லட்சம் யூனிட் மின்சாரம் தேவை. இது மட்டுமல்ல ஒரு பெரிய தொழிற்சாலையில் செலவாகும் மின்சாரத்தைக்கொண்டு ஒரு சிறிய நகரத்தின் மின்தேவையை பூர்த்தி செய்யலாம்.
அதெல்லாம் இருக்கட்டும் மின்வெட்டு குறைய நாம் என்ன செய்யலாம்?
# மின்விளக்குகள்,மின்விசிறிகள் மற்றும் மின்சாதனங்களை தேவையான அளவு நேரம் மட்டுமே பயன்படுத்தலாம்.
#அலங்காரவிளக்குகளை பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்.
# பகல்நேரங்களில் மின்விளக்குகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்.
#அதிக மின்திறன் கொண்ட பிரிஜ் ,A/C,தண்ணீர் மோட்டார் ஆகியவற்றை சரியான லெவலில் வைக்கலாம்.
# வீட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் தனித்தனி .'.பேன்,டிவி
பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்.
#பிரிஜ்ஜின் கதவுகளை அடிக்கடி திறப்பதைத் தவிர்க்கலாம்.
# A/C இயங்கும்போது குளிர்ச்சி கசிவைத்தடுக்க கதவுகளுக்கு ஆட்டோமேட்டிக் டோர் குளோசர்களைப் பொருத்தலாம்
#A/C அறைகளின் சன்னல்களை மூடி வைப்பதுடன் கண்ணாடி சன்னல்களுக்கு கெட்டியான திரைத்துணிகளைப் பொருத்தலாம்
#வீட்டு சுவர்களுக்கு வெள்ளை நிறம் அல்லது வெளுத்த நிற (லைட் கலர்)பெயிண்ட் அடிப்பதன்மூலம் சுமார் 30%மின்சாரத்தை சேமிக்கலாம்
சேமிக்கக் கூடிய மின்சக்தி அதே அளவு மின்சக்தியை உற்பத்தி செய்வதற்குச் சமம் என்பதை மறவாதீர் .
பலதுளிகள் சேர்ந்துதான் பெருவெள்ளமாகும்.
மின்சாரத்தை சேமிப்போம்.
நாட்டைக்காப்போம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)