மதிப்புமிகு தேர்தல் அதிகாரி அவர்களுக்கு
வணக்கம்
தேசிய வாக்காளர் தினம் [ஜனவரி 25] கொண்டாடும் இந்த நேரத்தில் தங்களுக்கும் நம் நாட்டு மக்களுக்கும் வாக்காளர் தின வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக்கொள்வதுடன், ஜனநாயகத்தின் வலிமைமிகு ஆயுதமான தேர்தல் வாக்குப்பதிவு முறையில் ஒரு சிறிய மாற்றத்தை செய்வதன் மூலம் தேர்தல் ஜனநாயகத்தை மேம்படுத்தலாம் என்று எண்ணுகிறோம்.
தற்போதுள்ள 49 ஓ முறையில் அதைப்பயன்படுத்துவோரை அடையாளம் காணப்பட்டு அரசியல்வாதிகளால் தனிமைப்படுத்தப்பட வாய்ப்புள்ளது எனவே யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்களுக்கான 49 ஓ வாய்ப்பை தனி படிவத்தில் வழங்குவதற்கு பதிலாக வாக்குப்பதிவு இயந்திரத்தில்
49 ஓ- வுக்கென கூடுதலாக ஒரு பட்டனை அமைத்து விடுவதன் மூலம் வாக்காளரின் ரகசியத்தன்மை காக்கப்படும். அவ்வாறு தேர்தல் நடக்கும்போது மற்ற வேட்பாளர்களைவிட 49 ஓ- வுக்கு அதிக வாக்குகள் பதிவானால் அந்த தொகுதிக்கு ஒரு மாத இடைவெளிக்குள் மறு தேர்தல் நடத்தலாம்.
மேலும் முன்னதாக நடந்த தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் (கணவன் ,மனைவி ,மகள், மகன், பெற்றோர்,பேரன்,பேத்தி,மருமகள் ஆகியோர் ) மறுதேர்தலில் போட்டியிடத்தடை விதிக்கலாம் இதன்மூலம் மக்களுக்குப் பிடிக்காதவர்கள் பதவிக்கு வருவதைத் தடுக்க முடியும். மேலும் அரசியல்வாதிகளும் மக்கள் நிராகரித்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் நேர்மையாக மக்கள் பணியாற்ற முற்படுவார்கள்.
நேர்மையான தேர்தல் முயற்சியில் ஈடுபட்டுள்ள தாங்கள் எம்முடைய இந்த ஆலோசனையைப் பரிசீலிப்பீர்கள்
என்ற நம்பிக்கையுடன்
சாதாரண வாக்காளன்
{இந்த கட்டுரை நகல் மதிப்புமிகு தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி அவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது}
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக