வெள்ளி, 11 ஜனவரி, 2013

கலியுகப் பொங்கல் கவிதை


கணினி நிறுவனங்களின்
வாசல்களில்
மின் விளக்கு அடுப்பில்
தெர்மாகோல் பொங்கல்
'Happy Pongal" வாசகங்களுடன்.

பொங்கலின் பொருள் தெரியா
கழுத்துப் பட்டை
மென் பொறியாளர்களுக்கு
மின்னஞ்சல் உதடுகள்
காதலியரிடமிருந்து.

தமிழன்
'எப்போது பொங்குவான்
தன் நிலைகண்டு'
பட்டிமன்றங்கள் பொதிகையில்.


ரங்கநாதன் தெருக்களிலும்
பிட்சா கார்னர்களிலும்
நகைக்கடைகளிலும்
கொடிகட்டிப் பறக்கும்
விடுமுறை வருமானம்


வலிகளின் வரவால்
எலிகளைத் தின்று
வளைகளில் வாடும்
விவசாயத் தோழன் மட்டும்
கடன் வாங்கிப் பொங்குகிறான்
பொங்கல்.
பொங்கலோ பொங்கல்.
பொங்கலோ பொங்கல்.
 - கவிஞர் சேவியர்
                   நன்றி: kavithaivalthukal.blogspot.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக