ஞாயிறு, 6 ஜனவரி, 2013

மின்வெட்டு


நம்மை உச்சகட்ட கடுப்பில் ஆழ்த்தும் விஷயம் மின்வெட்டு போதுமான மின்உற்பத்திக்கு  வகை செய்யாமல் புதிது புதிதாக  பெரும் தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்குவது
மின்சார சாதனங்களை லட்சக்கணக்கில் இலவசமாக  (வண்ணத் தொலைக்காட்சி,மிக்ஸி,கிரைண்டர்,.'.பேன்  )வழங்கியது ஆகியவையும் மின்வெட்டுக்கு காரணமாகின்றன.
ஒரு வண்ணத் தொலைக்காட்சிக்கு 60 வாட்ஸ், மிக்சிக்கு 650 வாட்ஸ்,கிரைண்டருக்கு 350வாட்ஸ்,  . '. பேனுக்கு 60வாட்ஸ் இதுஎல்லாமே  ஒரு மணிநேரத்துக்குத் தேவையான மின்சாரமாகும்.
என்ன புரியலியா?  
உதாரணத்துக்கு ஒரு வண்ணத் தொலைக்காட்சிக்கு 60வாட்ஸ் மின்சாரம் தேவைப்பட்டாக்கூட 40லட்சம்  டிவிகளுக்கு இருபத்துநான்கு லட்சம் யூனிட் மின்சாரம் தேவை.  இது மட்டுமல்ல ஒரு பெரிய  தொழிற்சாலையில் செலவாகும் மின்சாரத்தைக்கொண்டு ஒரு சிறிய நகரத்தின் மின்தேவையை பூர்த்தி செய்யலாம்.
 
அதெல்லாம் இருக்கட்டும் மின்வெட்டு குறைய நாம் என்ன செய்யலாம்?
#
மின்விளக்குகள்,மின்விசிறிகள் மற்றும் மின்சாதனங்களை தேவையான அளவு நேரம் மட்டுமே  பயன்படுத்தலாம்.
#
அலங்காரவிளக்குகளை பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்.
#
பகல்நேரங்களில் மின்விளக்குகளைப்  பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்.
#
அதிக மின்திறன் கொண்ட பிரிஜ் ,A/C,தண்ணீர் மோட்டார் ஆகியவற்றை சரியான லெவலில் வைக்கலாம்.
#
வீட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் தனித்தனி .'.பேன்,டிவி 
பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்.
#பிரிஜ்ஜின் கதவுகளை அடிக்கடி திறப்பதைத் தவிர்க்கலாம்.
# A/C  இயங்கும்போது குளிர்ச்சி கசிவைத்தடுக்க கதவுகளுக்கு ஆட்டோமேட்டிக் டோர் குளோசர்களைப் பொருத்தலாம் 
#A/C  அறைகளின் சன்னல்களை மூடி வைப்பதுடன்  கண்ணாடி சன்னல்களுக்கு கெட்டியான திரைத்துணிகளைப் பொருத்தலாம்
#வீட்டு சுவர்களுக்கு வெள்ளை நிறம் அல்லது வெளுத்த நிற (லைட் கலர்)பெயிண்ட் அடிப்பதன்மூலம் சுமார் 30%மின்சாரத்தை சேமிக்கலாம்
    சேமிக்கக் கூடிய மின்சக்தி அதே அளவு மின்சக்தியை உற்பத்தி செய்வதற்குச் சமம் என்பதை மறவாதீர் .
பலதுளிகள் சேர்ந்துதான் பெருவெள்ளமாகும்.
மின்சாரத்தை சேமிப்போம். 
நாட்டைக்காப்போம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக